டில்லி

நாடெங்கும் உள்ள வங்கிகள் இந்த மாதம் 15 நாட்கள் வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகின்றது.  இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அதிக நாட்கள் வங்கிகள் செயல்படாது என தெரிய வந்துள்ளது.   இம்மாதம் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் செயல்படாத இந்த 15 நாட்களில் வார இறுதி விடுமுறை நாட்கள் 7 நாட்கள் ஆகும்.  மீதமுள்ள 8 நாட்கள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள மாநில வாரியான கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகை நாட்களாகும்.  இவை அந்தந்த மாநிலங்களுக்கு  ஏற்ப மாறக்கூடியதாகும்.  எனவே இவை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடக்கூடும்.,.

 இதன்படி ஆகஸ் 15 சுதந்திர தினம், மற்றும்ஆலஸ்ட் 19  முகரம் பண்டிகை தினங்கள் பொது விடுமுறையாக இருக்கும்.  இதைத் தவிர, ஜன்மாஷ்டமி, தினமும் பெரும்பாலான மாநிலங்களுக்கு விடுமுறை தினமாக இருக்கும். மற்றும் தனித்தனியான விடுமுறை தினங்களையும் கணக்கெடுத்தால் அதிக பட்சமாக 15 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிய வந்துள்ளது.