இம்பால்:  இமாச்சலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ஒழுங்கின்மையால் நடந்துகொண்டதால்,.  பாஜகவைச் சேர்ந்த  எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட  15 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இமாசல பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிரா சில எம்எல்ஏக்கள்,  ஒரு அமைச்சர் உள்பட சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால், அங்கு சலசலப்பு எழுந்துள்ளது. நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலின்போது, ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்து, அவரை வெற்றி பெற வைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இன்று திடீரென அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து, இன்றைய பேரவை கூட்டத்திலும், சபாநயகரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் அத்துமீறி செயல்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இன்று இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி,  விபின் சிங் பர்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், இந்தர் சிங் காந்தி, திலீப் தாக்கூர் மற்றும் இந்தர் உள்ளிட்ட 15 பாஜக எம்எல்ஏக்கள். இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இன்று சபாநாயகர் அறையில் கோஷம் எழுப்பியதாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் கூறி, விபின் சிங், இந்தர் சிங்  காந்தியை சட்டப்பேரவை சபாநாயகர் வெளியேற்றினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட  இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி  40 எம்எல்ஏக்கள்  உள்ளனர்.  பாஜகவுக்கு  25 எம்எல்ஏக்கள்  உள்ளனர்.