டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, ராஜினாமா செய்துள்ள கவுன்சிலர்கள் திய கட்சி தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் பாஜக என்று ஆத்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள 15 கவுன்சிலர்களும், முன்னாள் துணைமுதல்வர் சிசோடியாவின் தீவிர விசுவாசியான, முகேஷ் கோயல் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், 15 கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து தனிப்பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். நேற்று (மே 17ந்தேதி – சனிக்கிழமை) பிற்பகல் 13 கவுன்சிலர்கள் திடீரென தங்களது ராஜினாமா குறித்து அறிவித்த நிலையில், இரண்டு பேர் சில மணி நேரங்களுக்குப் பிறகு தங்கள் விலகலை அறிவித்தனர்.
ஆத்ஆத்மி ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால்மீதான அதிருப்தி காரணமாக இவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். இவர்களில், முக்கியமானவர், எம்சிடியில் ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராக இருந்த முகேஷ் கோயலும் அடங்குவார். முகேஷ் கோயல் டெல்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றியதால், அவரது விலகல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) கோயலின் தலைமையில் கவுன்சிலர்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை அறிவித்தனர். இந்த கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

“கடந்த சில ஆண்டுகளாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் நாங்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். மேலும் பல கவுன்சிலர்கள் எங்கள் புதிய கட்சியில் சேரக்கூடும்” என்று கோயல் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட கோயல் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்த 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் விவரம்:
- ஹேம்சந்த் கோயல்
- ஹிமானி ஜெயின்
- ருனாக்ஷி சர்மா
- உஷா சர்மா
- அசோக் பாண்டே
- ராக்கி யாதவ்
- சாஹிப் குமார்
- ராகேஷ் குமார் லடி
- மனிஷா
- சுமாலி அனில் ராணா
- தினேஷ்
- முகேஷ் குமார் கோயல்
- தேவிந்தர் குமார்
- லீனா குமார்
- கமல் பரத்வாஜ்