சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக  தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், நேற்று 1187 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 1,14,260ஆக  அதிகரித்துள்ளது.

சென்னையில்  இதுவரை 1,00,643 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,408 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில், 12,745 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

 

[youtube-feed feed=1]