சென்னை:
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று விவரங்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு பாதிப்பு உள்ளது.
தமிழகத்தில் நேஙறறு ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களில் 14,667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் ,16,881பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பலி எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை – 4,082 , தேனாம்பேட்டை – 3,844, கோடம்பாக்கம் – 3,409, திரு.வி.க.நகர் – 2,922 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.