சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 2,710 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொர்ந்து மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 37 பேர் பலியான நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,112 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 55% ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 2,710 பேரில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2,652 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள 58 பேர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,742 பேர் ஆண்கள், 968 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 36,598 ஆண்களும்,22,759 பெண்களும், 20 திருநங்கைகள்.
இன்றைக்கு மட்டும் 26,592 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 9,19,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 27,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 46 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் 86 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்: