வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்ட வருகிறது. சுமார் 145 உயரமுள்ள இந்த முருகன் சிலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலையில், உலகின் உயரமான முருகன் சிலை மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலின் நுழைவு வாயிலில் உளளது. சர்வதேச புகழ்பெற்ற இந்த முருகனை காண தினசரி ஏராளமானோர் மலேசியா வந்து செல்கின்றனர். இதன் உயரம் 140 அடி.
இந்த மலேசியா முருகன் சிலையை வடிவமைத்தவர் தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர். இவர்கள்தான் தற்போது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் 145 உயரமுள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலையை வடிவமைத்து வருகின்றனர்.
இதனால், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமம் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்துக்களிடையே மிக பிரபலமாகி வருகிறது. இந்த பிரமாண்டமான முருகன் சிலையை தினந்தோறும் ஏராளமானோர் ஆச்சர்யத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர்.
தற்போது இந்த சிலையின் வேலைப்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த வரும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்காக கோவில் திறக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.