இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு சாலைப் பயணம் மேற்கொள்ள நீங்கள் வெகுநாட்களாகக் கண்ட கனவு இப்போது இறுதியாக நிஜமாகப் போகிறது.
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை, இந்தியாவில் உள்ள மோரே என்ற இடத்தையும் தாய்லாந்தில் உள்ள மே சாட் என்ற இடத்தையும் மியான்மர் மூலம் இணைக்கும். இந்தப் பாதை கிட்டத்தட்ட 1,400 கிலோமீட்டர் நீளம் அளவுடையது மற்றும் இந்தியா தென்கிழக்கு ஆசியாவுடன் நேரடியாக நிலத்தினால் இணைக்கப்படுவது பல தசாப்தங்களில் இதுவே முதல் முறையானது.
மூன்று நாடுகளுக்கும் இடையே பொருட்களின் எளிதான போக்குவரத்தை அனுமதிப்பதன் மூலம், இந்த நெடுஞ்சாலை வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிவர்த்தனையை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2012-ல் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி தொடங்கியிருந்தாலும், ஒரு சமீபத்திய வளர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது: மியான்மரில் இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட 73 பாலங்கள் சீரமைப்பு. இது வாகனங்கள் நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க அனுமதிக்கும்.
இந்தப் பணி கிட்டத்தட்ட 18 மாதங்கள் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் இந்தியத் தூதர், பகவன் சிங் பிஷ்னாய் கூறினார். அதன் பின்னர் நெடுஞ்சாலை மூன்று நாடுகளில் இருந்தும் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்றும் கூறுகிறார்.
இந்தப் பாதை வடமேற்கு தாய்லாந்தையும் வடகிழக்கு இந்தியாவையும் மட்டும் இணைக்கும் போது, சாலைப் பயணப் பிரியர்கள் மியான்மாரை கடக்கும் முத்தரப்பு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி, இந்தப் பயணத்தை எப்படி புது தில்லியிலிருந்து பாங்காக் வரை நீட்டிப்பது என்று திட்டமிட்டு வருகின்றனர்.
ஒரு வரைபடத்தில் முத்தரப்பு நெடுஞ்சாலை இது போலத் தான் இருக்கும். பாதை பின்வருமாறு இயங்கும்:
⦁ மோரே (இந்தியா)
⦁ டமு (மியன்மார்)
⦁ கலெவா
⦁ யக்யி
⦁ மொனிவா
⦁ மண்டலே
⦁ மெய்க்டிலா
⦁ நெ ப்யி டாவ்
⦁ பயாகி
⦁ தெயின்சயாட்
⦁ தடான்
⦁ ஹஃபான்
⦁ காகரெக்
⦁ மியாவாடி
⦁ மே சாட் (தாய்லாந்து)
இந்த நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்களா?