மதுரை: மதுரையில் 14 வார்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் இருக்கின்றன.

ஜூன் 18ம் தேதி வரை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 வார்டுகளில் 14 வார்டுகளில் 50 சதவீதம் கொரோனா தொற்றுகள் உள்ளன. 40 வார்டுகளில் கொரோனா இல்லை.

ஆனால் ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொரோனா தொற்று சதவீதம் குறிப்பிட்டத்தக்க அளவு உயர்ந்திருக்கின்றன. மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காணப்படும் 398 கொரோனா தொற்றில் மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 177 தொற்றுகள் பதிவாகி உள்ளன.

4 மண்டலங்களில் 2வது மண்டலத்தில் 67, 4வது மண்டலத்தில் 21, மற்ற மண்டலங்களில் 20 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளன. 2வது மண்டலத்தில் உள்ள செல்லூரில் 13 தொற்றுகள் உள்ளன.

தத்தனேரி (மண்டலம் 2), சின்ன அனுப்பநாடி (மண்டலம் 3) தலா ஆறு தொற்றுகள் உள்ளன. தொற்றுகள் அதிகரித்து வருவதால், மூன்று வழக்குகளுக்கு மேல் உள்ள இடங்களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக வரையறுக்க திட்டமிட்டுள்ளனர் கலெக்டர் டி. ஜி. வினய் என்று கூறியுள்ளார்.

செல்லூர் போன்ற இடங்களில் காய்ச்சலை கண்டறிய சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கும் ஏராளாமான தொற்றுகள் பதிவு செய்துள்ளன. சோதனைக்கு வருபவர்களிடம் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.