சென்னை: பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, மேலும் 14 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கனவே 11 மீனவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்த நிலையில், அடுத்ததாக மேலும் 14 மீனவர்களையும் விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணாக இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதற்கான ஒப்பந்தகளும் கையெழுத்தானது. இந்த பயணத்தின்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாககூறப்படுகிறது.
கொழும்பு நகரில் இலங்கை அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, இலங்கை அரசின் உயரிய விருதான , நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘இலங்கை மித்ர விபூஷண’ விருதை இலங்கை அதிபர் அனுரகுமார் திசாநாயக்க சனிக்கிழமை (ஏப்ரல் 5) வழங்கினார். ரதமர் இந்த விருதை 1.4 பில்லியன் நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான “ஆழமான நட்புக்கு” அர்ப்பணிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசு தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது.