
அகமதாபாத்:
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகி 14 பேர் பலியான சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் நாதியாத் பகுதியில் வாடகை ஜீப் ஒன்று நேற்று இரவு அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து சரக்கு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் ஜீப் சுக்குநூறாக நசுங்கியது. அதில் பயணித்த 14 பேர் பலியானார்கள். மேலும் 9 பேர் படு காயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]