சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக அருண்சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகதிகள் மறுவாழ்வு, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல இயக்குனராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் மக்கள் குடும்பநலத்துறை இணை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.