சிச்சுவான்

சீன நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சீன அரசுக்குச் சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இங்கு 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேரைக் காணவில்லை. மீட்புக் குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.  இது அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி,என்பதால் அடிக்கடி  நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது.