சென்னை:

மிழகத்தில் நேற்று  4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,469 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பட்டியல் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அண்ணாநகரில் 1,640 பேரும், தேனாம்பேட்டையில் 1,562 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் 1,148 பேரும், ராயபுரத்தில் 1,243 பேரும், திரு.வி.க நகரில் 996 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சென்னையில், 08-05-2020 முதல் 13-07-2020 வரை 16,609 காய்ச்சல் சோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. அதில்  10,37,173 பேர் கலந்து கொண்டனர். இவர்களில்  52,872 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு  சிறு வியாதிகளுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.