சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 299 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,088 ஆக இருந்த நிலையில் இன்று 1,007 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1007 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,39,023 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனாவுக்கு நேற்று 26 பேர் இறந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 1 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,737 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 818 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,06,228 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, சிகிச்சையில் 11,058 பேர் உள்ளனர்.
நாட்டில் இதுவரை 1,86,22,76,304 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 14,48,876 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று புதிதாக 299 பேருக்கு தொற்று உறுதியானது முந்தைய நாளை விட நேற்று 50 சதவீதம் புதிய வழக்குகள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரவல் எண்ணிக்கையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எக்ஸ்.இ. வகை புதிய மாறுபாடு கண்டறியப்படும் வரை பரவலை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்தார். மருத்துவமனைகளை கண்காணித்து வருவதாகவும், பரவல் அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.