சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ந்தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நவ.25-ல் சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றது. இதுவரை 4 சுற்று கலந்தாய்வுகள் முடிந்து, வகுப்புகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கலந்தாய்வில் பங்கேற்று, கல்லூரிகளில் சேராத வகையில் 35 காலி இடங்கள் உள்ளன. (தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 34 இடங்கள் காலியாக உள்ளன.) மேலும், இந்த ஆண்டுமத்தியஅரசு புதிதாக அன்னை மருத்துவ கல்லூரிக்கு 50 மருத்துவ இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த இடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்ப முள்ளவர்கள், மருத்துவக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 இடங்கள் காலி: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு!