சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

சென்னையின் 2வது பெரிய விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்கள், அவர்களின் விளைநிலங்கள், குளம் குட்டைகள் அகற்றப்பட உள்ளது. இதையடுத்து, கிராமக்கள் அங்கிருந்து வெளியே தமிழகஅரசு உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவர்களின் நிலத்துக்கு 3 மடங்கு விலை வழங்கப்படும் என கூறியது.
ஆனால், இதை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் கடந்த இரு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அந்த பகுதிகளுக்கு செல்ல பத்திரிகையாளர், சமூக ஆல்வலர்கள், அரசியல் கட்சியினர் செல்ல தமிழகஅரசு தடை விதித்துள்ளதுடன், அந்த பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனால் கடுமையான அதிருப்தியில் உள்ள அப்பகுதி மக்கள் பகலில் விவசாய பணிகளை மேற்கொண்டுவிட்டு, மாலை முதல் இரவு வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிர அடைந்து வருகிறது. மேலும், அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 17-ந் தேதி 13 கிராம மக்கள் சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், அரசு அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.