ஸ்ரீநகர்: காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக மாநில காவல்துறை ஐஜி விஜயகுமார் கூறியுள்ளார்.

கடந்த மாதம்,  காஷ்மீரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள், பெண்கள் என பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரே நேரத்தில்  7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியை காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் முடுக்கிவிட்டனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையின்போது 13 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஐ.ஜி. விஜயகுமார், கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதி களில் 3 பயங்கரவாதிகளை நாங்கள் சுட்டு கொன்றுள்ளோம் என்று கூறியவர், பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதி கள், 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.