லக்னோ: உ.பி.யில் திருமண நிகழ்ச்சியை கிணற்றின்மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோக சம்பவம் அம்மாநிலத்தின் குஷி நகரில் நடைபெற்றுள்ளது.
உ.பி. மாநிலம் குஷி நகர் அருகே உள்ள நவுரங்கியா தோலா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அங்கிருந்த கிணற்றின் மீது ஏறி நின்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அந்த கிணறானது இரும்பு கம்பிகளைக்கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், ஏராளமானோர் அந்த கிணற்றின்மீது ஏறியதால், பாரம் தாக்காமல், கம்பி உடைந்து, கிணற்றுக்குள் விழுந்தது. இதிந சோக சம்பவத்தில் 13 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து சிறுமிகளும் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.