ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் தேசிய எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் காயமடைந்தனர்.

நேற்று மாலை சுமார் 6.25 மணியளவில் இந்திய எல்லைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். ஆனால் பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்ததால் பயங்கரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

அப்போது பயங்கரவாதிகளின் கையெறி குண்டுகளை வீசியதன் காரணமாக துணைராணுவப் படை வீரர்கள் 10 பேர் காயமடைந்ததாகவும்,  , அனந்நாக் மாவட்டத்தில் உள்ள அஞ்சிதோரா பகுதியில் வசித்து வரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் புல்வாமா மாவட்டத்தில் பத்கம்போரா பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளின் புதிய வகை யுக்தியாக  கையெறி குண்டுகளை சரமாரி வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதற்கு இந்திய எல்லையோர காவல்படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.