லக்னோ
கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 45 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. இதில் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக நிவாரணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,
வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல், சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
மேலும் புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கவுசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.. இங்கு மழை தொடர்வதால் மீட்புப் பணிகள் தீவிர்மாக்கபட்டுள்ளன,
[youtube-feed feed=1]