ணிலா

னமழை காரணமாக பிலிப்பைன்ஸில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்/

People walk through a street flooded from monsoon rains worsened by offshore typhoon Gaemi on Wednesday, July 24, 2024, in Manila, Philippines. (AP Photo/Joeal Calupitan)

சமீபத்தில் தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது.

எனவே பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கிஅங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமானது. இங்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளியில் மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை சிக்கி வேரோடு சாய்ந்தன. கரையோரங்களில் இருந்த 6 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டு பொது போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டு அரசு தெரிவித்துள்ளது.