இன்று ‘ஜாலியான்வாலா பாக் படுகொலைகள்’ நடந்த தினம். 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வட இந்தியாவின் அம்ரிஸ்தர் நகரின் ஜாலியன் என்ற இடத்தில் ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் உத்தரவின் பேரில், 10 நிமிடம் நடந்த சூட்டில், சுமார் 379பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில், இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக் கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நடந்து இன்றுடன் 103 ஆண்டுகள் நிறைவடைந்தது.
தம்முடைய இன்னுயிர் ஈந்து தேசம் காத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமையை போற்றுவோம்.
Patrikai.com official YouTube Channel