சென்னை

மிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த உடன் கட்டாயமாக 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பரவலால் சென்ற மார்ச் இறுதி முதல் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   இதையொட்டி ஏப்[ரல் மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9,10, மற்றும் 11 ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தார்.  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

ஆனால் கொரோனா  பாதிப்பு மேலும் அதிகரித்ததால் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.   செய்முறை தேர்வுகள் மட்டும் நடந்துள்ளன.  மே 31 ஆம் தேதி அன்று எழுத்துத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருகிறது.  மேலும்  தற்போது புதிய அரசு பங்கேற்றுள்ளது.  எனவே இது குறித்து அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர் – ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்ட முடிவில் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஆகவே கொரோனா  பரவல் குறைந்த பிறகு 12 ஆம் வகுப்புத் தேர்வு நடைபெறும்.  இது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.