காபூல்
அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தொடர்ச்சியாக 8 முறை ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி நிலநடுக்கத்திற்கு 120 பேர் வரை உயிரிழந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்
நில நடுக்கத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர். நகரின் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கட்டிடங்கள் குலுங்கியதால் கட்டிசச் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன.
பலர் உயர்ந்த கட்டிடங்களில் இருந்து அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர்., பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.