சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

மிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில்  சட்டமன்ற தேர்தல்  நடத்துவதற்கான பணிகளை  தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே தீவிர வாக்காளர் சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2026   பிப்ரவரி 26, 27ம் தேதிகளில் தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து விரைவில் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த வாரம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகளைமேற்கொள்ள கூடுதல் அதிகாரிகளை பணியமர்த்தும்  நடவடிக்கை யில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயகம் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தல், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக தினசரி அறிக்கை தயாரித்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]