Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
TN ASSEMBLY ELECTION 2021 தமிழ் நாடு

சென்னையில் இதுவரை 1,221 பேர் தபால் ஓட்டு; ரூ.20கோடி பறிமுதல்! பிரகாஷ் தகவல்

Mar 29, 2021

சென்னை: சென்னையில் கடந்த 3நாளில் 1,221 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர் என்றும், ரூ.20கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள என  சென்னை தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக தபால் வாக்குப்பதிவு மார்ச் 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் சென்னை அம்மா மாளிகையில் நேற்று நடந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலைப் பொறுத்தவரை ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.   கூடுதல் வேட்பாளர்கள் உள்ளதால், 7 ஆயிரத்து 181 துணை வாக்குப்பதிவு எந்திரங்களும், 537 விவிபேட் எந்திரங்களும் குலுக்கல் முறையில் தொகுதிக்கு ஒதுக்கும் முறை நடந்து முடிந்தது. இவை 31-ந்தேதிக்குள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்.
சென்னையில் (28ந்தேதி வரை) 1182 முதியோர்கள், 39 மாற்றுத்திறனாளிகள் என 1221 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை மூலம் ஏறக்குறைய ரூ.20 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில்  கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தேர்தல் தொடர்பாக இதுவரை 316 புகார்கள் வந்துள்ளன. 312 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம், பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 3 ஆயிரத்து 258 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 2 ஆயிரத்து 89 விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 648 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 413 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 108 விண்ணப்பங்கள் அனுமதி பெற்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 36 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் மட்டும் அதிக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுகின்றன. அந்தவகையில் அங்கு 3 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தியாகராயநகரில் குறைவான வேட்பாளர்கள் உள்ளதால், அங்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படுகிறது.
துறைமுகம் தொகுதியில் ரூ.7 கோடியே 77 லட்சம் வரையிலும், அண்ணாநகர் தொகுதியில் ரூ.5 கோடியே 31 லட்சம் வரையிலும், வேளச்சேரியில் ரூ.5 கோடியே 50 லட்சம் வரையிலும் பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உள்ள  16 தொகுதிகளில் இந்த தபால் வாக்கு பதிவு செய்யப்பட உள்ள நிலையில், 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யப்படுகிறது. தபால் வாக்கு பதிவு செய்ய 7,300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Post navigation

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்! ராகுல் காந்தி
செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கம்பிகளின் விலை உயர்வு: 9முன்னணி நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை?

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer