பெங்களூரு: நடப்பாண்டு ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்களுக்கான  ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதிகபட்ச வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் இறுதியாக 590 பேர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. ஐபிஎல் விதிகளின்படி,  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து விட்டு, புதிய வீரர்களை தேர்வு செய்யும் வகையில் மெகா ஏலம் நடத்துவது வாடிக்கை. ஏற்கனவே உள்ள அணிகளில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்க்கொள்ள முடியும் என்பதால், மற்ற வீரர்களை தேர்வு செய்ய அணி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதிதாக இணைய உள்ள 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே, அவர்கள் விருப்பப்படும் 3 வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஐபிஎல்  ஏலத்தில் கலந்துகொள்ள உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1214 விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து இறுதியாக 590 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக பிசிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் பெங்களூருவில் நடக்கும்ஐபிஎல் 2022 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஏலத்தில் பதிவு செய்த 590 வீரர்களில், 228 ஏற்கெனவே ஆடிய வீரர்கள், 355 பேர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஆடாத வீரர்கள் மற்றும் 7 பேர் அசோசியேட் நேஷன்ஸைச் சேர்ந்தவர்கள்.

ஐபிஎல்லின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் கெய்ல், 2022 ஏலத்தில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 கோடி உச்சவரம்பு கொண்ட ரிசர்வ் விலைப் பட்டியல் வீரர்களில் 48 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி விலையின் கீழ் 20 வீரர்கள் உள்ளனர். ரூ.1 கோடி ஏலவிலைப் பிரிவில் 34 வீரர்கள் உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பாட் கம்மின்ஸ், குயின்டன் டி காக், ஷிகர் தவான், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, முகமது ஷமி மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்ட பத்து வீரர்களை உள்ளடக்கிய தலையாய வீரர்கள் ஏலம் மூலம் இது தொடங்கும் என தெரிகிறது.

ஐபிஎல் ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ள வீரர்கள் பட்டியல்

இந்தியா – 370

ஆஸ்திரேலியா – 47 வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் -34 வீரர்கள்

தென் ஆப்பிரிக்கா -33 வீரர்கள்

இங்கிலாந்து – 24 வீரர்கள்

இலங்கை – 23 வீரர்கள்

ஆப்கானிஸ்தான் – 17 வீரர்கள்

பங்களாதேஷ் – 5 வீரர்கள்

அயர்லாந்து – 5 வீரர்கள்

நமீபியா – 3 வீரர்கள்

ஸ்காட்லாந்து -2 வீரர்கள்

நேபாளம், அமெரிக்கா, ஜிம்பாப்வே – தலா ஒரு வீரர்.