சென்னையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபடும் போலீசார் படும் அவஸ்தைகள், சொல்லி மாளாத ரகம்.

வி.ஐ.பி.க்கள் சென்னை நகருக்குள் ’விசிட்’ அடித்தால், சாலை ஓரங்களில் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டும்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் என்றால், இந்த காத்திருப்பு மணிக்கணக்கில் நீண்டு கொண்டே போகும்,

அப்போதெல்லாம் இயற்கை உபாதைகளால் போலீசார் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

பெண் போலீசார் நிலை, ரொம்பவும் மோசம்.

எனவே அவர்கள் கஷ்டத்தை மனதில் வைத்து சென்னையில் 12 நகரும் (மொபைல்) கழிப்பறைகளை புழக்கத்தில் விட தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகரும் கழிப்பறையும், ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு ‘டேங்க்’ வசதி கொண்டதாகும்.

“பந்தோபஸ்து பணியில் இருக்கும் போது இயற்கை உபாதையை கழிக்க இடம் இருக்காது என்பதால், பல மணி நேரம் சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துள்ளோம். இந்த ‘மொபல் டாய்லெட்’ எங்களுக்கு, ஆறுதலாக இருக்கும்” என்கிறார்கள் பெண் போலீசார்.

– பா. பாரதி