கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டப்பபட்ட 12 அடி பக்கவாட்டு சுவர் சரிந்தது. நள்ளிரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாநகரப்பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு தேர்வாகி உள்ளதாக கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டப்பட்ட பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளை கடந்தும் எந்தவொரு ஸ்மார்ட் சிட்டியும் இன்னும் உருப்படியாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக எப்போதும்போல, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையிலும் அதுபோல ஸ்மார்ட் சிட்டி உருவாக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. 2021ல் முடிக்க வேண்டிய ஸ்மார்ட் திட்ட பணிகளில் இதுவரை பாதி அளவுகூட முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாநில அரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணத்தை வேறு திட்டங்களுக்கு திருப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் கட்டப்பட்ட 12 அடி பக்கவாட்டு சுவர் சரிந்தது. இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.