டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 47,176 பேர் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.82% சதவிகிதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகள் தொடர்பாக தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில், நேற்று ஒரே நாளில் மேலும் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,970 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது.
தற்போது 47,945 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 905 குறைவு.
கொரோனா பாதிப்பால் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,15,26,13.039 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். நேற்று மட்டும் 30,76.035 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]