ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியையும் உயிரிழப்பு 38லட்சத்தையும் தாண்டி உள்ளது.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொண்டு, 2வது அலை, 3வது என மாறி மாறி உலக மக்களை துன்புறுத்தி வருகிறது. தொற்றுபரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதை மக்களுக்கு செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,60,25,820 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் தொற்றின் பாதிப்பில் இருந்து விடுபட்டோர் மொத்த எண்ணிக்கை 15,95,95,320 கோடி ஆக அதிகரித்துள்ளது.
தொற்றின் தீவிர தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உலகம் முழுவதும் இதுவரை 38 லட்சத்து 1078 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போத நிலையில் தொற்று பாதிப்பு காரணமாக 1,26,30,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 84,216 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,305,270 ஆகவும், உயிரிழப்பு – 614,717 ஆகவும் குணமடைந்தோர் – 28,345,577 ஆக உள்ளது.
2வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 29,358,033 ஆகவும் உயிரிழப்பு 367,097 ஆகவும் குணமடைந்தோர் 27,901,688 ஆகவும் உள்ளது.