சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரிப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரத்தில் பாதிப்பு 4500 கடந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக  நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது நோயால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 13,012 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 13,698 பேர் என்றும், இறந்தவர்களின் எணிண்கை 275 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பிலும், இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது. அங்கு 4584 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு  இதுவரை 2,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,944 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனா உயிரிழப்பில் 49 பேருடன் திருவிக நகர் 2வது இடத்தில் உள்ளது. தேனாம்பேட்டை 42 பலியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ராயபுரம்  4,584 பேருக்கும், தண்டையாா்பேட்டை 3,584 பேருக்கும், தேனாம்பேட்டை 3,291 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,966 பேருக்கும், திருவிக நகரில் 2,550 பேருக்கும், அண்ணா நகரில் 2,571 பேருக்கும், அடையாறில் 1,534 பேருக்கும்  தொற்று உறுதியாகி உள்ளது. மேலே உள்ள  6 மண்டலங்களில் மட்டும் சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர் மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு 900 என்ற அளவில் உள்ளது.

11.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 50.8% பேர் (13,698) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.