rasi
12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்: ஜோதிட மாமணி லயன் கே. விஷ்வேரன்
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமையான இன்று, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கிறார்கள்.
வெள்ளம் , சுனாமிக்கு அஞ்சுவது போலவே, ராகு கேதுவுக்கும் அனைவரும் பயப்படுவார்கள். காரணம், இவர்கள் எந்த கிரகத்துடன் இணைகிறார்களோ, எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் பலனைத் தருவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் வாழ்வின் உயர்வும் தாழ்வும் இவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
ராகுவால் ஏற்படப் போகும் பலாபலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
சிம்மத்திலிருந்து தன் கதிர்வீச்சுகளால் உலகை ஆளப்போகிறார் ராகு. மருத்துவத்துறையில் புதுப்புது கண்டிபிடிப்புகள் நடக்கும். ஆகவே மருத்துவத்துறை நவீனமாகும். மருந்து மாத்திரைகளின் விலை குறையும். மரபணு ஆய்வுத் துறையில் புது புது கண்டுபிடிப்புகள் நடக்கும். பொதுவாகவே பள்ளி கல்லூரி பாடத்திட்டங்கள் மாறும். அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெறுவர். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வு பெறும் வயதை அரசு, குறைக்கக்கூடும். சூரியன் வீட்டில் ராகு அமர்வதால் புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் பெருகும். . உலகம் முழுதும் குழப்பமான அரசியல் சூழ்நிலை, இன, மத சண்டைகள், நாடுகளுக்கிடையே போர் என்று பிரச்சினைகள் அதிகரிக்கும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மூட்டு வலி, எலும்புத் தேய்வு போன்ற உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
11.03.2016முதல் 15.11.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் , பாதிக்கும். வாகன பணங்களில் எச்சரிக்கை தேவை. , கணவன் மனைவிக்குள் அனுசரனை தேவை. இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
16.11.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். திருமண வயதில் இருப்போருக்கு திருமணம் தள்ளிப்போகும். வீண் வம்பு வழக்கு தேடிவரும். கவனம்.
கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
இந்த காலகட்டத்தில் கும்பத்தில் அமர்ந்து ஆட்சி செய்வார்கேது. இவர், சனி வீட்டில் அமர்வதால் பரம்பரைப் பணக்காரர்களுக்கும், பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மதமாற்றங்கள் நிறைய நடக்கும். பழைய தொழிற்சாலைகள் நலிவடையும். மத மோதல்கள் ஏற்பட்டு வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்படு அபாயும் உண்டு. பஞ்சாப், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பதட்ட நிலை நிலவும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நல பாதிப்பு, குடும்பத்தல் குதர்க்கம், மன அமைதி பாதிப்பு, பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் வந்து நீங்கும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை உள்ள காலகட்டத்தில் சதயம் நட்சத்திரக்காரர்கள் வம்பு வழக்குகளில் சிக்கக்கூடும். விபத்துகள் ஏற்படலாம். அவமரியாதை ஏற்படும் சூழல் உருவாகும்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும்., முன்கோபத்தால் தம்பதியிடையே மனக்கசப்பு ஏற்படும்.

12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்கல் படிக்கை