11

 

ன்பார்ந்த வாசகர்களே…!

01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்த நாள். அதோடு, 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை அளிக்கிறது இந்த புத்தாண்டு.

சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, சிறப்பாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் மிரட்டல்கள் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். விவசாயம் செழித்தோங்கும்.

அதேபோல ஸ்ரீதுர்காதேவியின கருணையாலும் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையில் இருப்பதாலும் யோகத்தை தரும்

ஆனால், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும்.. ஆகவே சுகாதாரத்திலும் உடல் நலனிலும் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இனி 12 ராசி அன்பர்களுக்குமான தனித்தனி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் விரிவாக… நாளை….

அன்புடன்,

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்