சென்னை : நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பங்ளளி கல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்பு போலவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

மத்திய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசு புதிதாக மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்த மாநில கல்விக்கொள்கையில், பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும் என்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.