தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக மே 1ம் தேதி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியஸ் (115 டிகிரி F) வரை வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூரில் 104 முதல் 107 டிகிரி F (40 டிகிரி செல்சியஸ் – 42 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகும்.

https://x.com/ChennaiRains/status/1783757253767573692

உள் மாவட்டங்களில் வரண்ட வானிலை காரணமாகவும் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் காரணமாகவும் வெப்ப அலை வீசும் என்று கூறியுள்ளனர்.