சென்னை: பேரறிஞர் மறைந்த அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கும், அண்ணா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Patrikai.com official YouTube Channel