சென்னை: தமிழகத்தில் 3வது நாளாக இன்றும் 100ஐ கடந்துள்ளது கொரோனா பலி எண்ணிக்கை.
தமிழகத்தில் 3 நாட்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4461 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலியானவர்களில் 28 பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். 84 பேர் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 997 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இன்றைய நிலவரப்படி கொரோனாவிலிருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உள்ளது.