சென்னை

நேற்றைய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 11070 பேர் ஆப்செண்ட் ஆகி உளனனர்

திங்கள் கிழமை அன்று பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.  முதல் நாளன்று  தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வு வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மாண்வர்களின் வசதிக்காக ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறுகிறது.  இந்ததேர்வுக்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மார்ச் 5ந்தேதி  நடந்த முதல்நாள் தேர்வு அதாவது,  மொழி பாடத்துக்கான தேரைவை 11,070 பேர் எழுதவில்லை என்றும் 8,07,299 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.