வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா உள்பட பலர் நடித்து வருகின்றனர் . மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா, மகன் என டபுள் ரோலில் நடிக்கிறார் தனுஷ்.
இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் அசுரன் படம் 110 தியேட்டர்களில் திரையிட படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.