ராஜ்கோட்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 11 வயதுப் பெண் ஆறு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு பெற்ற பெண் குழந்தை தற்போது மருத்துவ மனையில் உடல நலமின்றி உள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் 11 வயதே ஆன ஒரு சிறு பெண்ணை காவல்துறையினர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எட்டு மாத கர்ப்பத்தில் பிறந்த அந்தப் பெண் குழந்தை 1.5 கிலோ எடையுடன் இருந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு முதுகெலும்பு வயிற்றுனுள் இறங்கியதால் உறுப்புக்கள் செயலிழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அப்படி செய்தாலும் உறுப்புகள் இயங்குவது கடினம் ஆனாலும் உயிர் பிழைத்து வாழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குழந்தையை பாதுகாத்து வரும் பெண் காவலர், “இந்தக் குழந்தையின் தாயும் ஒரு சிறுமியே. 11 வயதான அந்தப் பெண்ணை ஆறு பேர் அதுவும் 17 வயதில் இருந்து 67 வயது வரையிலானவர்கள் தொடர் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண் அதனால் கர்ப்பம் அடைந்துள்ளார். காவல்துறையினர் இது குறித்து மன்சி ஜெயா (வயது 67), கோவிந்த் சகாரியா (வயது 60) விஜானந்த் மையத் (வயது 47), விபுல் சவுதா (வயது 40) ஆகியோரும் 17 வயதே ஆன ஒரு சிறுவனும் ஆகிய ஆறு பேரை பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர்.
தற்போது அந்தப் சிறுமியின் தாய் வழி பாட்டி உடன் இருக்கிறார். அவர் தனது பேத்தியின் எதிர்கால வாழ்க்கை இந்தக் குழந்தையால் பாதிக்கப்படும் என்பதால் குழந்தையே ஏற்க மறுத்துள்ளார். ஆகையால் நானும் இன்னொரு காவலரும் இந்தக் குழந்தையை கவனித்து வருகிறோம். அந்த சிறுமியின் தந்தை மனநிலை சரியில்லாதவர். தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்தக் குழந்தையை விரைவில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்க மருத்துவமனை அறிவுறுத்தி உள்ளது” என தெரிவித்தார்.