கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாகர்கோவில் – அசாம் சிறப்பு ரயில் 21.06.24 வரையும், அசாம் – நாகர்கோவில் 26.06.24 வரையும், நாகர்கோவில் – அசாம் 28.06.24 வரை, அசாம் – நாகர்கோவில் 03.07.24 வரை, கோவை – ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை (வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில்) 27.06.24 வரை, பகத் கி கோதி – கோவை சிறப்பு ரயில் (வாரம் ஒருமுறை
கொச்சுவேலி – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் 28.06.24 வரை, ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி – சாலிமர் வாராந்திர ரயில் 1.07.24 வரை, சாலிமர் – கொச்சுவேலி வாராந்திர ரயில் 28.06.24 வரை, கொச்சுவேலி – பெங்களூரு, வாராந்திர ரயில் 2.07.24 வரைஇ பெங்களூரு – கொச்சுவேலி வாராந்திர ரயில் 3.7.24 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.