சென்னை: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது  உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக யாருடன் கூட்டணி  என்பத  குறித்து முடிவு செய்துவிட்டதாக கூறியதுடன்,  தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை காட்டவும், கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு உள்பட அரசியல் பேரத்தை அதிகரிக்கவும் மாநாடுகளை நடத்தி வருகின்றன. இதன் பின்னணியில் தேமுதிக மாநாடு ஜனவரி 9ந்தேதி அன்று சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமம் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  நடைபெற்றது.

இந்த மாநாட்டை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட  11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிக தரப்பில், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேபோல், இலங்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.  விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கரும்புக்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும். விஜயகாந்திற்கு தனியாக பொது இடத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.  தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வெறும் ரசிகர் மன்றமாக தொடங்கப்பட்டு, இன்று தேமுதிகவாக வளர்ந்து நிற்கிறது. விஜயகாந்திற்கு முதல் வெற்றியை கொடுத்த மாவட்டம் கடலூர். இந்த மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை. 2006 சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜயகாந்த் வென்றார். அப்போது அனைவருடனும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் இப்போது நினைவுக்கு வருகிறது.

கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.  கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது. *தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானம் மக்களுக்கானவை. விஜயகாந்த் இல்லாமல் நாம் யாரும் இல்லை.

கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது. நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன். *எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.   கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை

கோயம்பேடு அலுவலகத்தில் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்.  பணம் கொடுக்காமல் விஜயகாந்த் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம் இது.  தேமுதிக கட்சிக்க இணையான கட்சி ஏதும் இல்லை.  கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன். தேமுதிக-வை பற்றி ஏளமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

யாருடன் தேமுதிக கூட்டணி என்பதை தொண்டர்கள் முடிவு எடுப்பார்கள். தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகி களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.  யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தாகிவிட்டது.  அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

யாரெல்லாம் என்ன ஆலோசனை கொடுத்தார்கள் என்பதை நான் மட்டுமே தனியாக அமர்ந்து படித்தேன். மகன் என்பதால், விஜயபிரபாகரனிடம் கூட அதனை சொல்லவில்லை. யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்துவிட்டோம். ஆலோசித்து, தெளிவாக சிந்தித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூறி இருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும். இத்தனை நாட்களாக சத்ரியனாக வாழ்ந்துவிடோம்.. இனி சாணக்யனாக வாழ வேண்டும். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்காத போது, நாம் முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட தேவையில்லை. இதனால் நிதானமாக கூட்டணியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்றவர், தற்போது மாற்றி பேசி உள்ளார்.

[youtube-feed feed=1]