நாகை:
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர்.
நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரு வழக்கிலும் சட்ட போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த இரு வழக்குகள் குறித்து டிடிவி தினகரன் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை சட்ட ஆலோசனைக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’’ என்றார்.