சென்னை:

ன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் காலை 11மணி அளவில்ன வாக்குப்பதிவு நிலவரம் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடைபெற்று வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 32.54% வாக்குகள் பதிவு ஆகி உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகள் பதிவு ஆகி உள்ளது.

அதுபோல புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.  காலை 9 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது, 23.89 வாக்குகள் பதிவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, அந்தத் தொகுதியில் 13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் காலை 11 மணி அளவில் 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது.