டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில், அதாவது இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,01,670 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 340 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.
நாடு முழுவதும் தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,00,925 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.25%
தற்போது நாடு முழுவதும 1,38,556 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை 61,99,02,064 சோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 11,89,470 சோதனை செய்யப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 57,54,817 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,10,23,34,225 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.