சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா லாக்டவுனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றின் பாதிப்பு குறையாததால், அரசு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு கேள்விக்குறியாகி வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்தார்.
மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள்திறப்பு, பாடங்கள் குறைப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு அறிவித்தபின், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.