10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை: அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு

Must read

சென்னை:

மிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டு (2019-2020)  கல்வி ஆண்டில் நடைபெற உள்ள   10வது, 11வது மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்கக ம் அறிவித்து உள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ந்தேதி தொடங்கி, மார்ச் 24ம் தேதி முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, மார்ச் 26ந்தேதி முடிவடையும் என்றும் தேர்வு முடிவுகள்  மே 14ந் தேதி வெளியிடப்படும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 9ம் தேதி முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 4;ம் தேதி  தேதி வெளியிடப்படும்.

மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி தேர்வெழுதுவதற்கு முன்னதாகவே தயாராகும் வகையில், கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

More articles

Latest article