கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக eநடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவு, என்ஐஏ-வின் பதிவு செய்துள்ள முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை கார் வெடிப்பு சம்பவம். இந்த சம்பவத்தை தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் கோவையில் 5 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் பயங்கரவாத திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த முபின் உடன் தொடர்பில் உள்ள 15 பேரை காவல்துறையினரும், என்ஐஏ அமைப்பினரும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கார் வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ-பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் முபின் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டு உள்ளதுடன், உயிரிழந்த முபினுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிக்கும் வெடிபொருட்களான பொட்டாசியம் நைட்ரேட், சிவப்பு பாஸ்பரஸ், நைட்ரோ கிளிசரின், அலுமினியம் தூள், ஆக்ஸிஜன் சிலிண்டர், கந்தகத்தூள் உள்ளிட்ட 75 கிலோ வெடிபொருள் மற்றும் சர்ஜிகல் பிளேட், 9 வோல்ட் பேட்டரி, இரும்பு ஆணி, கேஸ் சிலிண்டர், கையுறை, உட்பட 109 பொருட்கள், மற்றும் இஸ்லாமிய சித்தாந்தம், ஜிகாத் அடங்கிய நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைப்போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிடப்டுள்ளது.
அத்துடன் கோவை கார் வெடிப்பு வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.